வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (10:15 IST)

இது கொரோனா ஹேர் ஸ்டைலாம்... பிரபல இயக்குனரின் லாக்டவுன் அட்ராசிட்டி!

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது.

இவர் கடந்த ஆண்டும் தனது காதல் மனைவியை சமத்துவ முறைபடி திடீர் பதிவு திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து இந்த அழகிய தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தன் மகள் ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்குணம் கொண்ட பெண்ணாக வளர வேண்டும் என கருதி அவளுக்கு புரட்சியாளர் லெனின் பெயரை சூட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுனில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நவீன் தனது ட்விட்டரில் "கொரோனா ஹேர்ஸ்டைல்" என கூறி தன் செல்ல மகளுக்கு புதிய ஹேர்ஸ்டைல் போட்டுவிட்டு அழகு பார்த்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.