செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:05 IST)

அஜித்தும் கமலும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டனர்… கொதிக்கும் இயக்குனர்!

பரதக்கலையை மையமாக வைத்து நடனக்கலைஞர் சாய் ஸ்ரீராம் குமார சம்பவம் என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக பரதநாட்டியக் கலையில் இயங்கி வரும் கே சாய் ஸ்ரீராம் இப்போது குமாரசம்பவம் என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். இவரின் அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். சிவாஜி உள்ளிட்டவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ‘பல வருடங்களாகவே சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். வரலாறு படத்தில் அஜித்தும், விஸ்வரூபம் படத்தில் கமலும் நடனம் கற்றுக்கொண்டதால் பெண் தன்மை வந்துவிட்டதாகக் காட்சிப்படுத்த பட்டிருப்பார்கள். பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. இதனால் பரதம் கற்றுக்கொள்ள விரும்பும் ஆண்கள் பெண் தன்மை வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர். இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன். அஜித்தாவது வேறு யாரோ சொன்னதைக் கேட்டு நடித்துவிட்டார் என சொல்லலாம். ஆனால் பரதம் பற்றி அறிந்த கமலும் ஆண் பரதக் கலைஞர்களை இழிவு செய்துவிட்டார்.’ எனக் கூறியுள்ளார்.