1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (09:11 IST)

தமிழ் சினிமாவிலேயே கேம்ப் போடும் தில்ராஜு… எல்லாத்துக்கும் ‘வாய்க்கா தகராறுதான்’ காரணமா?

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்களை தயாரிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மிக முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு அடுத்து தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் வாரிசு படத்தை அடுத்து தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹரி ஷங்கர் என்பவர் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனை அடுத்து தனுஷுக்கும் ஒரு படத்துக்கான முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் தில் ராஜு. இதற்கு தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான மகேஷ் பாபு, பிரபாஸ் உள்ளிட்ட  பலரோடு பிரச்சனை செய்துள்ளதால்தான் தெலுங்கில் அவர் தயாரிப்பில் முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லப்படுகிறது.