வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (20:08 IST)

மது அருந்திவிட்டு கார் ஓட்டினேனா?நடிகை யாஷிகா விளக்கம்

தான் மது அருந்திவிட்டு கார் ஓட்டவில்லை என நடிகை யாஷிகா தெரிவித்துள்ளார்.
 

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார்.

இந்நிலையில், இந்த விபத்து நடிகை யாஷிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  சட்டம் என்பது அனைவருக்கும்  ஒன்றுதான். நான் மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தியதாக பலரும் புரளி கிளப்பி வருகின்றனர். நான் மது அருந்தவில்லை என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். நான் மது அருந்திருந்தால் சிறையில் இருந்திருக்க நேரிடும். நான் உடல்நலம் தேறி நடக்க குறைந்தது 5 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.