வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (09:59 IST)

சென்னையில் இருந்து ஹைத்ராபாத்திற்கு சைக்கிளில் சென்ற அஜித்? - வைரல் புகைப்படம் !

அல்டிமேட் ஸ்டார் தல அஜித் தற்போது ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில்  "வலிமை" படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்பட்டது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பிற்கு தேவையான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கடந்த சில நாட்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு செட் அமைக்கும் பணி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் இந்த பணி தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் அஜித் சைக்கிளில் ஹைத்ராபாத்திற்கு சென்றுள்ளார். சுமார் 600 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்தே பயணித்துள்ளார் என்றும் கூறப்டுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டும் தல அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. பின்னர் இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில்....இது சில  ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தற்போது தெரியவந்தது.