'தில்லுக்கு துட்டு 2' - குடும்ப பேய்களுடன் மிரட்ட வரும் சந்தானம்!

VM| Last Updated: திங்கள், 29 அக்டோபர் 2018 (13:11 IST)
கதாநாயகனாக அவதாரம் எடுத்த பின்பு நடிகர் சந்தானத்துக்கு முக்கியமான திருப்புமுனை தந்த படம் தில்லுக்கு துட்டு. சந்தானத்தை பயமுறுத்துவதுக்காக பேய் வேஷத்தில் ஒரு கும்பல் மிரட்டும். ஆனால் உண்மையிலேயே  அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கும். 
நகைச்சுவையாகவும், திரில்லராகவும் வெளியான தில்லிக்கு துட்டு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் உற்சாகமான சந்தானம். இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் இயக்குனர் ராம் பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். தெலுங்கு நடிகை ஷிர்தா சிவதாஸ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்தரன். என்னமா ராமர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 
'தில்லிக்கு துட்டு 2' படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சந்தானம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குடும்ப பேய் படம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :