திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (18:31 IST)

OTT'க்கு டாட்டா காட்டினாரா கார்த்திக் சுப்புராஜ்? "ஜகமே தந்திரம்" ரிலீஸ் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில்  கொரோனா பிரச்னையால் இந்த படத்தை ஓடிடி பிளாட்பார்மில் நேரடியாக ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்ததாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகியது.

ஆனால், தற்ப்போது இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “இம்மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது திரைத்துறையினருக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். ‘ஜகமே தந்திரம்’ ரிலீசைப் பொறுத்தவரை அது தயாரிப்பாளரின் கைகளில் தான் இருக்கிறது.” என கூறியுள்ளார். இதன்முலம் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது மறைமுகமாக தெரியவந்துள்ளது.