செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 17 மே 2023 (12:50 IST)

கிரேட் எஸ்கேப்… நல்ல வேள அந்த படத்த மிஸ் பண்ணாரு தனுஷ்- மாட்டிக்கொண்ட ஜெயம் ரவி!

இயக்குனர் சுந்தர் சி யின் உதவியாளரும் மூவேந்தர், குங்குமப்பொட்டு கவுண்டர், தலைநகரம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர் சுராஜ். அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பெரியளவில் கவனம் பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தான் இயக்கிய சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர் படத்தை முதலில் தனுஷை வைத்துதான் இயக்க இருந்ததாக கூறியுள்ளார். படிக்காதவன், மாப்பிள்ளை படங்களுக்குப் பிறகு தனுஷை வைத்து சுராஜ் அப்பாடக்கர் படத்தைதான் இயக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் தனுஷால் நடிக்க முடியாமல் போகவே, அதில் ஜெயம் ரவியை நடிக்க வைத்ததாக இயக்குனர் சுராஜ் கூறியுள்ளார். அந்த படம் வெளியாகி ஜெயம் ரவியின் கேரியரில் மிக மோசமான தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.