1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (16:43 IST)

ரசிகரின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்த தனுஷ்!

தனுஷின் ரசிகர் ஒருவர் உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்ததை அடுத்து, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான இரங்கலை தனுஷ் தெரிவித்துள்ளார் 
 
தனுஷின் நற்பணி மன்றத்தின் செயலாளராக பணியாற்றிய தினேஷ் குமார் என்பவர் சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தனது ஆழ்ந்த இரங்கலை தனது டுவிட்டரில் தனுஷ் தெரிவித்துள்ளார் 
 
தனுஷ் மட்டுமின்றி ஈரோடு பகுதியில் உள்ள தனுஷ் ரசிகர்கள் பலர், மறைந்த தினேஷ் குமாரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் கூறியதாவது:
 
ஈரோடு மாவட்ட
எனது நண்பர்கள் நற்பணி 
மன்றத்தின் செயலாளராக
சிறப்பாக பணியாற்றிய
திரு.தினேஷ்குமார்
உடல்நல குறைவினால்
இன்று மறைந்தார் என்ற செய்தி
வேதனை அளிக்கிறது.
அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும்,
அவரின் குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும்
என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்