திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (11:21 IST)

அடேங்கப்பா... தனுஷின் குடும்பம் இவ்வளவு பெரியதா...? அவரது அக்கா வெளியிட்ட போட்டோ!

தமிழ் சினிமா உலகில் பன்முக திறமை கொண்ட தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் , பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி தற்போது முன்னணி நடிகராக நிலைத்து நின்று உள்ளார்.

இதையடுத்து கடந்த 2004ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது தனுஷின் அக்கா கார்த்திகா தங்களது குடும்ப புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் " என் வாழ்க்கையில் ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது ஒருவரை ஒருவர் பார்ப்பதை நாங்கள் தவறவிட்டதில்லை .. நம் வாழ்வில் முதல் முறையாக ஒரே ஊரில் இருந்தும் ஒருவருக்கொருவர் பார்க்காமல் இருக்கிறோம். இந்த உலகில் எதுவும் இல்லை குடும்பத்துடனும் உண்மையான அன்புடனும் தரமான நேரத்தை செலவிடுவதை விட சிறந்தது எதுவும் கிடையாது என கூறி பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், தனுஷின் அப்பா , அம்மா , அண்ணன் செல்வராகவன், அக்கா விமலா, கார்த்திகா , ஐஸ்வர்யா , அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா, செல்வராகவன், அவரின் மனைவி கீதாஞ்சலி, குழந்தைகள் மற்றும் விமலா, கார்த்திகா ஆகியோரின் கணவன்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தபோது எடுத்த அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த தனுஷின் ரசிகர்கள் இவ்வளவு பெரிய குடும்பமா என கேட்டு  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.