வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 27 நவம்பர் 2022 (09:31 IST)

இன்று பூஜையோடு தொடங்குகிறது தனுஷின் அடுத்த தெலுங்குப் படம்!

நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் 1950 கள் கால பின்னணியில் அரசியல் கதைகளத்தோடு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.