தனுஷின் 'பொல்லாத உலகம்' பாடல் புதிய சாதனை
தனுஷ் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் அடுத்த மாதம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பொல்லாத உலகம்#PolladhaUlagam என்ற பாடல் ஒன்றின் வீடியோ நேற்று வெளியாகி வைரலானது.
இந்நிலையில் #PolladhaUlagam பாடல் சுமார் 24 மணி நேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் இந்த சாதனையைப் படைத்த முதல் பாடல் என்பதால் இப்படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.