புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (19:46 IST)

லவ் யூ தலைவா..! தரமான சம்பவம் செஞ்சுடீங்க - தனுஷ் ட்வீட்

கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகி பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட .



சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்தப் படம் ரஜினி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று மரண மாஸ் காட்டிவருகிறது .
 
ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் பேட்ட படத்தை பற்றி அவரவர் தங்களின் கருத்துக்களை கூற தற்போது ரஜினியின் மருமகனும் நடிகருமான  தனுஷ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதாவது , "பேட்ட- காவியம்...சூப்பர் ஸ்டார்... லவ் யூ தலைவா... தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க!. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். ரஜினிஃபைட் (#Rajinified) ஆகிவிட்டோம். கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி. அனிருத்... இது தான் உங்களது சிறப்பான பிஜிஎம். பேட்ட பராக்" என ட்விட்டரில் வெறித்தனமாக பதிவிட்டுள்ளார். 

#petta is EPIC ... superstar .. love you thalaivaaaaa ... tharamaana sambavam senjiteenga. Congrats to the whole team. @karthiksubbaraj ..