செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (18:19 IST)

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வைரலான நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் வாட்டர் பாக்கெட் என்ற இந்த பாடல் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் இசை புயல் ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் வாட்டர் பாக்கெட் பாடலை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்கள் என்பதும் கானா காதர் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த கானா பாடல் வித்தியாசமாக இருப்பதை அடுத்து இந்த பாடல் சூப்பர்ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran