1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (17:33 IST)

வடசென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமே: தனுஷ் ஓபன் டாக்!

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணில் அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அப்போது நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது, வடசென்னை படம் எடுத்த போதே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் நானும் வெற்றிமாறனும் எடுத்தோம். எதையாவது எதிர்பார்த்து எடுத்தால் அப்படம் முழுமை பெறாது. 
 
நாங்கள் தேசிய விருது பற்றி யோசிக்கவில்லை. ஆனால் பொதுமக்களும் பத்திரிக்கைகளும் நாங்களே எதிர்பாராதவாறு கேள்வி எழுப்பினார்கள். வடசென்னைக்கு ஏன் தேசிய விருது இல்லை எனக் கேட்டார்கள். அதைச் சாதித்ததே எங்களது வெற்றிதான். அது போதும். 
 
நானும் வெற்றிமாறனும் முன்பே விருதுகள் வாங்கிவிட்டோம் அது போதும். ஆனால் நான் வேறு சிலருக்காக நான் விருதை எதிர்பார்த்தேன். ஆர்ட் டைரகடர் ஜாக்சன் இந்தப்படத்தில் கடுமையாக உழைத்திருந்தார். அவர் தகுதியானவர் அவருக்கு கிடைக்காதது வருத்தமே என தெரிவித்துள்ளார்.