புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (08:50 IST)

மொத்தமே 2 காட்சிதான்…. ‘தி கிரே மேன்’ பார்த்துட்டு கடுப்பாகும் தனுஷின் ரசிகர்கள்

தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாகவே சொல்லி இந்தியா முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்போடுதான் படம் தொடங்கப்பட்டது. தி கிரே மேன் படத்தில் தனுஷை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் படத்தின் டிரைலரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமானதாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் படக்குழுவினர் தனுஷை பிரமோஷன்களில் அதிகமாக ஈடுபடுத்தினர். மேலும் இந்தியா வந்த இயக்குனர்கள் தனுஷோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

ஆனால் இப்போது படம் வெளியாகிவிட்ட நிலையில் படத்தை பார்த்த இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. படத்தில் மொத்தமே 2 காட்சிகளில் மட்டுமே தனுஷ் வருகிறார். அதுவுமில்லாமல் அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதமும் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இந்திய மார்க்கெட்டை குறிவைத்து இந்திய நடிகர் ஒருவரை நடிக்க வைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தனுஷை நடிக்க வைத்துள்ளனர் என்று பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.