சிம்புவை போல தனுஷும் இதை செய்ய போகிறாராம்: என்ன தெரியுமா?
தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.
இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் - ரிச்சா கங்கோபாத்யா நடிப்பில் கடந்த 2011-ல் வெளியான படம் மயக்கம் என்ன. தற்போது இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இதே போல் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இது நம்ம ஆளு படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.