தனுஷ் 44: ஒரே படத்தில் நான்கு அவதாரம் - மேசீவ் அப்டேட்!
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அசுர வெற்றிகொடுத்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. கடைசியாக வெளிவந்த பட்டாஸ் திரைப்படமும் டீசண்டாக கலெக்ஷனை பெற்று கல்லா கட்டியது.
அதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் தனுஷின் 44வது படத்தை குறித்த ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கும் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதைவிட ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்தபடத்திற்கு நடிகர் தனுஷ் கதை திரைக்கதை, வசனம், நடிப்பு என 4 துறைகளில் சிறந்து விளங்கவிருக்கிறார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.