1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:23 IST)

பிரியா பவானி சங்கர் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு டிமாண்டி காலனி 2 பதில் சொல்லும் – விநியோகஸ்தர் பாராட்டு!

டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. அதிலும் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய கோப்ரா படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.

இதையடுத்து டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதிலும் அருள்நிதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மற்ற வேடங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள வருண் படத்தைப் பாராட்டியுள்ளார். அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் “ என்ன ஒரு திரைக்கதை. ஆகஸ்ட் 15 ஆம் தேதி மொத்த உலகமும் இந்த படத்தின் திரைக்கதையைப் பற்றி பேசும். எனது வாழ்நாளில் இப்படி ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட் நுனியில் உட்கார்ந்து பார்த்ததில்லை. பிரியா பவானி சங்கர் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு இந்த படம் பதில் சொல்லும். விமர்சகர்கள் இந்த படத்தில் இருந்து எப்படிக் குறையைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.