ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (16:08 IST)

டேனியல் பாலாஜியின் கடைசி திரைப்படம் ‘BP 180’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் பல படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கிய டேனியல் பாலாஜி கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக இயறகை எய்தினார். அவரின் திடீர் மரணம் ரசிகர்களையும் திரையுலகினரையும் உலுக்கியது.

இறப்பதற்கு முன்னர் டேனியல் பாலாஜி சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்படி அவர் நடித்து முடித்த படங்களில் ஒன்றான “BP180” என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் JP இயக்க ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவை ராமலிங்கம் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை இளையராஜா செய்துள்ளார். அதுல் இண்டியா மூவிஸ் நிறுவனம் சார்பாக அதுல் எம் போஸாமியா தயாரித்துள்ளார். மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய படமாக BP 180 உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.