1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (13:07 IST)

ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த கட்ட பயணம் நாளை ஆரம்பம்

கடந்த சில நாட்களாகவே ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்கவுள்ளார் என்றும், புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளார் என்றும், அல்லது மதிமுகவில் இணையபோவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.
 
டுவிட்டரில் ஆர்.ஜே பாலாஜி ஆக்டிவ்வாக இருப்பவர் என்றாலும் இந்த வதந்திகளுக்கு அவர் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கான விளம்பரம் தான் இந்த அரசியல் அறிவிப்புகள் என்று அவரது தரப்பினர் மட்டும் கருத்து கூறினர்.
 
இந்த நிலையில் நாளை சிஎஸ்கே போட்டி நடைபெறும்போது சிஎஸ்கே வீர்ர்கள் தனது அடுத்தகட்ட பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் சிஎஸ்கே வீரர்கள் அறிவிப்பது ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த திரைப்படமா? அல்லது அரசியல் அறிவிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்