1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:40 IST)

சிவகார்த்திகேயன் சம்பள விவகார வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

sivakarthikeyan
நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்ததற்காக தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது இந்த பிரச்சினை குறித்து தீர்வுகாண நடுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
மேலும் ஞானவேல்ராஜா தயாரித்து வரும் மூன்று திரைப்படங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது