வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (17:55 IST)

கொரோனா பரிசோதனை இன்னும் வரவில்லை....அஜித் பட நடிகை புகார்

தனக்கு இன்னும் கொரோனா பரிசோதனை முடிவுகள் எதுவும் வரவில்லை என்று பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
.
நடிகர் ஜீவாவுடன் கோ, ஜெய்யுடன் கோவா, அஜித் நடிப்பில் வெளியான ஏகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை பியா.

சமீபத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தம்பிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் உயிரிழந்ததாகப் புகார் அளித்த நடிகை பியாவுக்கு இன்னும் கொரோனா தொற்றுப் பரிசோதனை முடிவு வரவில்லை எனப் புகார்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கடந்த  மே 7 ஆம் தேதி எனது குடும்பத்தினருடன் நான் கொரொனா பரிசோதனை எடுத்துக் கொண்டேன். ஆனால் இதற்காக முடிவுகள் இன்னும் வரவில்லை என தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவரது ரசிகர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.