திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:16 IST)

பெண் குழந்தைக்கு தந்தையாக குக் வித் கோமாளி புகழ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து புகழ் திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும், மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அவர் பென்சி என்ற பெண்ணை மணந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இந்நிலையில் நேற்று புகழ் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைப் பகிர்ந்துகொண்ட புகழ் “இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்...#என்மகளே ...தாயும் சேயும் நலம்” எனக் கூறியுள்ளார்.