விபூதி வைக்ககூடாதுன்னு சொன்னாரா ரஹ்மானின் தாய் – இணையத்தில் சுற்றும் சர்ச்சை!
சமீபத்தில் பாடலாசிரியர் பிறைசூடன் அளித்த நேர்காணல் ஒன்று ரஹ்மான் பற்றிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
திரையுலகில் எப்போதும் தன்னைச் சுற்றி எந்த சர்ச்சையும் இருக்கக்கூடாது என நினைப்பவர்களில் ஏ ஆர் ரஹ்மான் முதன்மையானவர். தான் உண்டு தன் பணி உண்டு என இருக்கும் அவர் பற்றிய சர்ச்சை ஒன்று கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் சுற்றி வருகிறது.
சமீபத்தில் தமிழ் பாடலாசிரியரான பிறைசூடன் அளித்த நேர்காணல் ஒன்றில் ரஹ்மானுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினார். அதில் ரஹ்மானுடன் பணிபுரிய அவர் வீட்டுக்கு சென்ற போது ரஹ்மானின் தாயார் இங்கே விபூதி குங்குமம் எல்லாம் வைக்கக் கூடாது என கூறியதாக சொன்னார். அதை வைத்து ரஹ்மானை மதத்துவேஷம் கொண்டவர் என ஒரு சாரார் குற்றச்சாட்டு வைத்தனர்.
ஆனால் பலரும் ரஹ்மான் எந்த மதத்தையும் இழிவாக நினைப்பவர் இல்லை என்றும் அவர் மதச்சார்பற்றவர் என்றும் கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.