வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (10:36 IST)

மனம் தளராத ரகுல் பிரீத் சிங்கின் தன்னம்பிக்கை!

புத்தகம் படம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் பீரீத் சிங். என்னமோ எதோ படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு பின் ஆந்திரா சென்றவர் அங்கே ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு என டாப் நடிகர்களின் புகழ் பெற்ற நடிகையாக மாறினார்.

அதன் பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று படம் தமிழுக்கு வந்தார். கார்த்தியுடன் ரகுல் ஜோடியாக நடித்த இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக தேவ் படத்தில்  இருவரும் சேர்ந்து நடித்தார்கள். இந்த படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் படம் தோல்வி அடைந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் "நான் வெற்றியைப் பார்த்து அதிக சந்தோஷப்பட மாட்டேன்... தோல்வியை கண்டு துவள மாட்டேன்... வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமாக எடுத்துக் கொள்வேன்" என்றார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்கு எனக்கு களைப்பு என்ற வார்த்தையை பிடிக்காது . 
 
நான் ஒருபோதும் களைப்படைவதில்லை. நீச்சல் ,கராத்தே , டென்னிஸ், ஸ்குவாஷ், இறகுப்பந்து என பல பயிற்சிகளை மேற் கொள்வதால் என் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது என்றார்.