கோப்ரா படக்குழு வெளியிட்ட விக்ரமின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ!
விக்ரம் நடித்து வரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 7 விதமான வெவ்வேறு விக்ரம் கொண்ட போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விக்ரமிற்கு ஸ்பெஷலாக நேற்றே கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து காமன் டிபி ஒன்றை வெளியிட்டு இன்று காலை 8.00 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி சற்றுமுன் கோப்ரா படத்தில் பணியாற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ ஷங்கர், இயக்குநர் அஜய் ஞானமுத்து, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் , பூவையார் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களும் விக்ரமிற்கு வாழ்த்து கூறி அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.