திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (23:33 IST)

சினிமா நடிகை பாலியல் வன்கொடுமை - இருவர் கைது!

சினிமாவில் துணை நடிகையாக  நடித்துவருவரை கத்தி முனையில் வன்கொடுமை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சினிமா துணை நடிகர். இவர் நேற்றிரவு இரவு வீட்டில் இருந்தபோது, சுமார் 10:30 மணியளவில் அவரது வீட்டுக்கதவை இருவர் தட்டியுள்ளனர்.

அப்போது, அவர் கதவைத் திறந்துள்ளார்.2 பேர் நின்றுகொண்டிருந்த நிலையில் அவர்களிடம் யார் என்று விசாரித்துள்ளார்.

அவர்கள் இருவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து நடிகை     வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் அங்குள்ளா சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இருவரையும் பிடித்து போலீஸார் கைது செய்து சிறையில்   அடைத்தனர்.