செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:00 IST)

சிரஞ்சீவி - மோகன் ராஜா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

சிரஞ்சீவி - மோகன் ராஜா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படம் ஒன்றை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதும் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் என்று கூறப்பட்டது

 
இந்த நிலையில் தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாக மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
எனது பெற்றோர்களின் ஆசி மற்றும் நலம் விரும்பிகளின் ஆசியால் இன்று எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. இந்த முறை மெகா ஸ்டார் உடன் இணைகிறேன். இதில் எனக்கு மிகவும் அற்புதமான டீம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாம் கலை இயக்குனராக சுரேஷ்ராஜன் மற்றும் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வா ஆகியோர் எனக்கு கிடைத்துள்ளனர், இவர்களின் உதவியால் இந்த படத்தை சிறப்பான முறையில் இயக்குவேன் என்று கூறியுள்ளார்
 
இதனை அடுத்து மோகன் ராஜாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான இந்த படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக சில மசாலா காட்சிகளை இணைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது