வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (09:52 IST)

பிரபலத்தை சிக்கவைத்த சின்மயி! அப்படியே பின்வாங்கியது ஏன்?

பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி  பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து தமிழ் திரையுலகினை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.


கவிஞர்  வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்,  மற்ற பிரபலங்கள் மீதும் புகார்களை வெளியிட்டார்.
 
இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது இலங்கை பெண் புகார் கூறியதாக சின்மயி அண்மையில் டுவிட் ஒன்றை வெளியிட்டார். ஆனால் பின்னர்  அது உண்மை அல்ல என்று தெரியவந்தது
 
தற்போது சின்மயி அப்படியே இந்த விஷயத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். "அந்த பெண் வேண்டுமானால் மீடியாவிடம் செல்லட்டும். நான் இனி ஆதரிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.