1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2016 (15:03 IST)

சீனாவை கலக்கப் போகும் பாகுபலி

சீனாவை கலக்கப் போகும் பாகுபலி

பாகுபலி வெளியான போது அப்படம் சீனாவில் வெளியானால் இதுவரையான இந்தியப் படங்களின் சீன வசூலை முறியடிக்கும் என்று வெளிநாட்டு இணையப் பத்திரிகைகள் எழுதின.


 
 
இந்திப் படங்களே சீனாவில் அதிகம் வசூலிக்கின்றன. தூம் 3 படத்தின் சாதனை வசூலை பிகே படம் முறியடித்தது. பாகுபலி இந்த வசூலை சில தினங்களிலேயே கடந்துவிடும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
 
இந்த மாதம் பாகுபலி சீனாவில் வெளியாகிறது. ஐந்தாயிரம் திரையரங்குகளில் படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. பாகுபலியின் வசூல் சாதனை சீனாவிலும் தொடரும்.