வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (15:52 IST)

சிம்பு & விஜய் சேதுபதி இணையும் புதிய படம் – இயக்குகிறார் முன்னணி இயக்குனர் !

சிம்பு மற்றும் விஜய் சேதுபதி

இயக்குனர் சேரன் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தினை இயக்க உள்ளார்.

இயக்குனர் சேரன் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை பிடித்திருந்தாலும் அப்போது விஜய் சேதுபதி பிஸியாக இருந்ததால் சில மாதங்கள் கழித்து அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் அதற்குள் சேரனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார்.

பின்னர் வெளியே வந்த போதும் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சேரன், சிம்புக்கு ஒரு கதை சொல்ல மாநாடு படத்துக்குப் பின்னர் அதில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சிம்பு, விஜய் சேதுபதி இருவரில் யாரை முதலில் இயக்குவார் சேரன் என்ற கேள்வி எழுந்தது.

இப்போது இருவரையும் ஒன்றாக இணைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் என்றும், அதற்காகதான் இருவரிடமும் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிம்புவும், விஜய் சேதுபதியும் இணைந்து செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.