வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (15:46 IST)

செல்வராகவன் படத்திற்கு வந்த சோதனை! – நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை!

செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. ரெஜினா கசாண்ட்ரா, நதிதா ஸ்வேதா ஆகியோர் நடித்து உருவான இந்த படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்பில் இருந்த இந்த படம் எதிர்வரும் மார்ச் 5 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு 1.24 கோடி கடன் பாக்கி தர வேண்டியுள்ளதாகவும், அதை தரும் வரையில் படத்தை வெளியிட கூடாது என்றும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் வழக்கு தொடந்துள்ளது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.