1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (18:49 IST)

சந்திரமுகி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

CHANDRAMUKI-2
சந்திரமுகி-2  படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்  லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு  இயக்கத்தில் உருவாகி வரும் படம் சந்திரமுகி 2.  இப்படத்தில் இவருடன் இணைந்து, வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  மரகதமணி இசையமைத்து வருகிறார்.

முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா  நடித்திருந்த கதாப்பாத்திரத்தில்  இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம்  தயாரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங்  நிறைவடைந்த நிலையில்,  இப்படத்தின் ரிலீஸுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சந்திரமுகி 2 படி வரும் கணேஷ் சதுர்த்தி( செப்டம்பர் 19)  அன்று இப்படம் தமிழ், கன்னடம், இந்தியில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.