வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (19:01 IST)

சூர்யா பட ஹீரோயின் மற்றும் இயக்குநரை பாராட்டிய கேப்டன் கோபிநாத்

சூர்யா நடித்து தயாரித்த படம் சூரரைப் போற்று   இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் ஆஸ்கர் விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் சூரரைப் போற்று திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பாலமுரளியின் நடிப்பையும், இப்படத்தை கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில்  பாராட்டியுள்ளார்.

இதில் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த பாலமுரளியை அசாதாராணமான தைரியமான பெண்ணாகக் காட்டியுள்ளீர்கள் இப்படத்தை சிறந்த முறையில் இயக்கிய சுதா கொங்கராவுக்கு எனது ஸ்பெஷல் சல்யூட் என கேப்டன் கோபிநாத் பாராட்டியுள்ளார்.