ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (18:49 IST)

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனார். தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படத்தில் நடித்தவர் தவசி. இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் அவருக்குத் திடீரென்று புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.