1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (12:53 IST)

தொழிலதிபரான நடிகை நயன்தாரா...

நயன்தாரா அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் புதிய தொழிலில்  தொழிலதிபராக களமிறங்கியுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர்  நடிப்பில், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படத்தை அடுத்து, ஷாருக்கானுன் இணைந்து நடித்த ஜவான் படம் சமீபத்தில் வெளியாகி ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா நடிகர், நடிகைகள் ரியல் எஸ்டேட், ஓட்டல் என பலதுறைகளில் முதலீடு செய்து வரும் நிலையில், நயன்தாரா தொழிலதிபராக களமிறங்கியுள்ளார்.

ஏற்கனவே கணவன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் நயன்தாரா, சருமபராமரிப்பு, அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் புதிய தொழில் தொடங்கியுள்ளார்.