அஜித்துடன் நான்காவது படமும் நடக்கும்… போனி கபூர் நம்பிக்கை!
அஜித்துடன் நான்காவது முறையும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆன திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அதன் பின்னர் அஜித்தோடு அவர் வலிமை படத்திலும் இணைந்தார். இப்போது மூன்றாவதாக அஜித் 61 படத்தையும் அவரே தயாரிக்கிறார். சமீபகாலமாக அஜித் ஒரே தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இப்போது போனி கபூர் அளித்துள்ள நேர்காணலில் அஜித்துடன் நான்காவது முறையும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனக் கூறியுள்ளார்.