திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:51 IST)

சூரிக்கு நெறய உதவி செஞ்சேன்.. ஆனா அவர் கண்டுக்கல- புலம்பிய பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான போண்டா மணி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என சக நடிகர்கள் கோரிக்கை விடுக்க, தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பண உதவி செய்தனர்.

இப்போது மெல்ல குணமாகி, சினிமாவில் நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அவர் அளித்துள்ள சமீபத்தைய நேர்காணலில் “சினிமாவில் சூரி, சின்ன சின்ன வேலைகள் செய்துவந்த போது அவருக்கு நிறைய உதவி செஞ்சு இருக்கேன். ஆனா அவர்கிட்ட நான் வாய்ப்புக் கேட்ட போது கொடுக்கல. உடம்பு சரியில்லாம இருந்த போது கூட உதவல” எனக் கூறியுள்ளார்.