போலாம் ரைட்... பிகில் சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ரிலீஸ்: வீடியோ இதோ...

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 8 நவம்பர் 2019 (17:36 IST)
பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே பாடலின் வீடியோ வர்ஷன் வெளியாகியுள்ளது. 
 
அட்லீ - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் படத்தில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. பெண்ககள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். உடன் ஜாக்கி ஷரோப், கதிர்,விவேக்,யோகி பாபு, இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.  
தற்போது வரை அனைத்து திரையரங்குகளிலும்  வெற்றிநடை போட்டு வரும் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடலின் வீடியோ வர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரகுமான் மற்றும் இயக்குனர் அட்லி சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளனர். 
 
இதோ இந்த பாடலின் வீடியோ... 
 
 


இதில் மேலும் படிக்கவும் :