1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 9 நவம்பர் 2019 (12:34 IST)

மெட்ராஸ் பாஷையில் விஜய்யை கலாய்க்கும் நயன் - ட்ரெண்டிங்கில் பிகில் பட காமெடி காட்சி..!

அட்லீ - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி கடந்த தீபாவளி தினத்தின்  ஸ்பெஷலாக செப்டம்பர் 27ம் தேதி வெளியான பிகில் படத்தில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. தற்போது வரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது வருகிறது. 
பெண்ககள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். உடன் ஜாக்கி ஷரோப், கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். 
 
தற்போது வரை திரையரங்குகளிலும்  வெற்றிநடை போட்டு வரும் பிகில் படத்தின் காமெடி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா விஜய்யுடன் மெட்ராஸ் பாஷை பேசி அசத்த விஜய்யும் நயனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பேசி கலாய்க்கிறார்.