ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (12:23 IST)

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: வைரலாகும் புகைப்படம்!

harish kalyan
நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: வைரலாகும் புகைப்படம்!
பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் திருமணம் இன்று நடந்ததை அடுத்து திரையுலகினர் பலர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகருமான ஹரிஷ் கல்யாண் இன்று நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 
 
இந்த திருமணத்திற்கு அவருடைய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பியார் பிரேமா காதல், இஸ்பேட்ராஜாவும்இதயராணியும், தாராள பிரபு உள்பட பல படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது ’நூறு கோடி வானவில்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran