ஆணாக மாற விரும்புகிறேன்: பிக்பாஸ் ஐஸ்வர்யா

Last Modified சனி, 29 செப்டம்பர் 2018 (21:56 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது நடந்து வரும் நிலையில் இதில் கேள்வி பதில் பகுதி ஒன்று வருகிறது. இதில் ஒரு கேள்வியாக 'நீங்கள் ஆணாக மாற விரும்புகிறீர்களா? என்று கமல்ஹாசன் கேள்விக்கு ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் பதிலளித்தனர்.

ஒரு பெண்ணாக தன்னால் சில சமயங்களில் சுயமாக முடிவெடுக்கவில்லை என்றும், அதனால் ஆணாக மாற விரும்பி தான் நினைத்ததை சாதிக்க விரும்புவதாகவும் ஐஸ்வர்யா கூறினார்.

விஜயலட்சுமியும் தான் ஆணாக மாறி, ஒரு பெண்ணை ஆராதிப்பேன் என்று கூறினார்.


ஜனனி, தான் பெண்ணாகவே இருக்க விரும்புவதாகவும் ஒரு பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை என்றும் கூறினார்.

ரித்விகாவும் பெண்ணாகவே இருக்க விரும்புவதாகவும் 'தாய்மை' என்பது பெண்ணுக்கு மட்டுமே உள்ள பெருமை என்றும் கூறினார்


இதில் மேலும் படிக்கவும் :