ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:02 IST)

பிக் பாஸ் அல்டிமேட் - புது ஆங்கருடன் ப்ரோமோ வீடியோ!!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் திடீரென கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த உடன் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியானது. 
 
புரோமோ வீடியோவுக்காக சிம்பு மேக்கப் போட்ட புகைப்படம் வைரலான நிலையில் இதன் பின்னர் ஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக சிம்புவின் புகைப்படத்தை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ விடியோவும் ஹாட்ஸ்டார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.