வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 7 டிசம்பர் 2024 (16:22 IST)

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வார எலிமினேஷன் பெண் போட்டியாளரா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இந்த வாரம் 12 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கும் நிலையில், இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், தற்போது எலிமினேஷன் செய்யப்படும் ஒரு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த தர்ஷிகா தான் இந்த வாரம் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.
 
அவர்தான் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும், எனவே அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், இன்னொரு போட்டியாளர் வெளியேறுவார் என்று செய்தி வெளியாகினாலும், அது யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. அநேகமாக நாளை காலை இது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விஜே விஷாலை காதலிப்பது போல் தர்ஷாவின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர் போட்டியில் இருந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran