திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (18:41 IST)

எதிர்பாராததை எதிர்பாருங்கள்... கமல் வெளியிட்ட பிக்பாஸ் 5 புதிய ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம் போலவே கமல் ஹாசனே தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறி புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருமண வீட்டில் நடக்கும் பிரச்னைகளை மையமாக கொண்டு அந்த ப்ரோமோ உருவாகியுள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.