செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (22:10 IST)

நீங்க பார்ப்பது டிரெய்லர்தான் ; 24 மணி நேரமும் அதேதான் - பிக்பாஸ் ரம்யா (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி மற்றும் சண்டைகளை நீங்கள் ஒரு மணி நேரம்தான் பார்க்கிறீர்கள். ஆனால், நாள் முழுவதும் அங்கு அதுதான் நடக்கிறது என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ரம்யா தெரிவித்துள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே நித்யா வெளியேற்றப்பட்டதற்கே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ரம்யா வெளியேற்றப்பட்டார். இத்தனைக்கும் அவர் மீது அந்த அதிருப்தியும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் மத்தியில் இல்லை. அவருக்கு ஆதரவாகவே பலரும் வாக்களித்து வந்தனர். அந்நிலையில்தான், அவர் வெளியேற்றப்பட்டார். இதனால், சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  
 
இந்நிலையில், ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்புதான் எனக்கு இவ்வளவு ஆதரவு இருப்பது எனக்கு தெரியவந்தது. அதற்கு நன்றி. இதற்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது. நீங்கள் ஒரு மணி நேரம்தான் பார்க்கிறீர்கள். நாள் முழுவதும் அங்கு ஒரே சண்டை, சச்சரவு, போட்டியாகவே இருக்கிறது. எனவே, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சிதான்” என தெரிவித்துள்ளார்.