1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (19:05 IST)

தண்டனையை ஏற்க மறுக்கும் மும்தாஜ் ; முற்றும் மோதல் (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் நடிகை மும்தாஜுக்கும் அங்குள்ள ஆண் போட்டியாளர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் நேற்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆண் போட்டியாளர்கள் எஜமானர்களாகவும், பெண் போட்டியாளர்கள் வேலைக்காரிகளாகவும் இருக்க வேண்டும். இந்த லக்சரி டாஸ்குக்கு 1600 பாயிண்டுகள் என்பதால் வேறு வழியின்றி பெண்கள் ஒப்புக்கொண்டனர்.
 
டாஸ்க் தொடங்குவதற்கு முன்பே மமதி ஒரு கண்டிஷன் போட்டார். நான் தமிழ்ப்பெண். தமிழ் கலாச்சாரத்துடன் வாழ்பவர். என் கணவரை தவிர வேறு எந்த ஆணையும் தொட மாட்டேன். எனவே கை,கால் அமுக்கிவிடுவது போன்ற வேலைகளை எனக்கு தரக்கூடாது என்றார்.
 
அதேபோல் மும்தாஜ் எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஆனால் அதற்கும் ஒரு லிமிட் உண்டு. இந்த லக்சரி டாஸ்க்கில் வெற்றி பெறுவது என்பது நீங்கள் கொடுக்கும் வேலையில் தான் உள்ளது என்று கூறினார்.
 
இந்நிலையில், இன்றை நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜ் சரியாக வேலை செய்யவில்லை என மஹத் கூற, மும்தாஜ் அவரிடம் கோபப்படுகிறது. அப்போது, எவ்வளவு நேரம் நீங்கள் வேலை செய்யவில்லையோ அவ்வளவு நேரம் நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என தண்டனை கொடுக்க, அதை செய்ய முடியாது என மும்தாஜ் மறுக்கிறார்.