பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நபருக்கு ரூ.20 லட்சம் அபராதம்
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டியதால் வெளியேற்றப்பட்ட நடிகருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் கலந்துக்கொண்ட சம்பூர்னேஷ் பாபு உடல்நலம் குறைவாக உள்ளதாகவும், பிக் பாஸ் வீடு வசதியாக இல்லை எனவும் கூறி கத்தியை எடுத்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டினார். இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் கத்தியை எடுத்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டியது வன்முறைக்கு விதிட்டதாக கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராத தொகையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பத்து நாட்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். தற்போது சம்பூர்னேஷ் பாபு ரூ.10 லட்சம் தொகையை செலுத்தியுள்ளார்.