திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (11:42 IST)

பிக்பாஸ் பிரபலத்திற்கு விரைவில் திருமணம்; யார் தெரியுமா...?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. தனது காதலர் யார் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களின் பார்வைக்கு அதிகம் வந்தவர் சுஜா வருணி. இவர் தனது காதலன் யார்  என்று ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், காதலன் சிவகுமார், சுஜா வருணிக்கு மோதிரம் அணியும் போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். விரைவில் திருமணம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.
இருவரும் காதலிக்க ஆரம்பித்து 11 வருடங்கள் ஆகிவிட்டதாம். இந்த நேரத்தில் சிவகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். விரைவில் திருமணத்தையும் எதிர்பார்க்கலாம்.